Sunday, March 15, 2015

வழமை போலவே தெருவில் அரசி



தங்கச் சாயம் பூசிய ஆகாயத்தினூடே
தூரத்தே தென்படுகிறது சுவர்க்கம்
ஞாயிறு அந்தியில் நடந்து செல்கிறேன் அரசி
வழமைபோலவே தெருவில்

இடையிடையே பூதங்களின் வடிவெடுத்து வந்துசெல்லும்
மோட்டார் வண்டியன்றி வேறேதுமில்லாதவிடத்து
ஆழ்ந்த தனிமையொன்று வந்து
எனக்கு இணையாக நடந்து செல்லும்
ஆவியொன்றோவென நான் எண்ணும்படியாக

சட சடவென்று மழைத்துளிகள் வீழ்கையில்
சுவர்க்கத்திலிருந்து வெளியே வீசப்படுகிறேன்
காற்று நிலத்தில் வீழ்த்தும்
சருகுகளைப் பொறுக்கும் இளைஞனொருவன்
வழிப்பாதையின் ஒரு மூலையில்
அதிர்ச்சியோடு பார்த்தவாறு...

- ஷஸிகா அமாலி முணசிங்க

Original Post - රැජිණ පාරෙහි පුරුදු ලෙස
Translated by M. Rishan Shareef
Picture - Gerald Harvey Jones

No comments:

Post a Comment